காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு


காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 13 Sept 2021 2:19 AM IST (Updated: 13 Sept 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்கு

திசையன்விளை:
இட்டமொழி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மங்களராஜ் (வயது 55). இவர் நாங்குநேரி கிழக்கு வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவராக உள்ளார். பார்ப்பரம்மாள்புரம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (54). இவர் நாங்குநேரி கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஆவார்.
இட்டமொழி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கட்சியின் பழைய கொடி கம்பத்திற்கு பெயிண்டு அடிப்பதற்காக மங்களராஜ் கழட்டியுள்ளார். அப்போது, அங்கு வந்த ரவீந்திரன் யாரை கேட்டு கொடி கம்பத்தை கழட்டுகிறாய் என்று கேட்டு மங்களராஜை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இட்டமொழியில் நடைபெற்ற விழாவுக்கு ரவீந்திரன் வந்தார். அப்போது, அங்கு வந்த மங்களராஜ், உனக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்டு ரவீந்திரனை தாக்கி, ரூ.3,200-ஐ எடுத்துக் கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக திசையன்விளை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், 2 பேர் மீதும், சப்-இன்ஸ்பெக்டர் லவிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story