மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை + "||" + Corona testing for 40 crore people in Karnataka so far

கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை
கர்நாடகத்தில் இதுவரை 4½ கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:

  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

4½ கோடி பேருக்கு பரிசோதனை

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 176 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 803 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 கோடியே 52 லட்சத்து 94 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 29 லட்சத்து 61 ஆயிரத்து 735 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

  கொரோனா பாதிப்புக்கு மேலும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.

16 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

  802 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 7 ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளது. 16 ஆயிரத்து 656 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

  பெங்களூரு நகரில் 255 பேர், தட்சிண கன்னடாவில் 153 பேர், ஹாசனில் 30 பேர், மைசூருவில் 36 பேர், குடகில் 63 பேர், உடுப்பியில் 90 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 6 பேரும், தட்சிண கன்னடா, பெலகாவி, ஹாசன், மைசூருவில் தலா 2 பேரும் என மொத்தம் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.