லாரியில் மணல் ஏற்றி வந்தவர் கைது


லாரியில் மணல் ஏற்றி வந்தவர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2021 2:38 AM IST (Updated: 13 Sept 2021 2:38 AM IST)
t-max-icont-min-icon

லாரியில் மணல் ஏற்றி வந்தவர் கைது

நெல்லை:
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைக்கண்ணு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் விலக்கில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதி இல்லாமல் கலியாவூரைச் சேர்ந்த நயினாமுகமது என்பவர் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து நயினா முகமதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் லாரியும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story