1,300 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


1,300 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 13 Sept 2021 2:58 AM IST (Updated: 13 Sept 2021 2:58 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில், கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்பட்ட 1,300 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில், கோவில்கள் மற்றும் வீடுகளில் பூஜைக்கு வைக்கப்பட்ட 1,300 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
1,300 விநாயகர் சிலைகள் கரைப்பு
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா உள்பட இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்காக முக்கிய சந்திப்பு மற்றும் கோவில்களில் வைக்கப்படும். சில நாட்கள் கழித்து விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும் அரசுதடைவிதித்தது. ஆனால் வீடுகள் மற்றும் கோவில்களில் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கியது.
அதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எளிமையாக நடந்தது. இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் 555 விநாயகர் சிலைகள் கோவில்கள் மற்றும் வீடுகளுக்கு வழங்கி, வழிபாடு நடத்தப்பட்டன. அந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் நேற்று ஆங்காங்கே உள்ள ஆறு, குளம், கால்வாய் போன்ற நீர் நிலைகளில் கரைக்கப்பட்டடன. இதேபோல் மாவட்டம் முழுவதும் வீடுகள் மற்றும் கோவில்களில் வைக்கப்பட்ட 1,300 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

Next Story