பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மோதல்; 8 பேர் கைது-போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மோதல்; 8 பேர் கைது-போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sept 2021 3:16 AM IST (Updated: 13 Sept 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தரப்பினர் மோதல்
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் மேற்கு ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர், பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (வயது 28), விக்னேஷ் (25), ராதாகிருஷ்ணன் (23), தினகரன் (22) ஆகிய 4 பேருக்கும் வேல்முருகனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே வேல்முருகன் தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆனந்தபாபு உள்ளிட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் கற்களை வீசி ஒருவருக்கொருவர் தாக்கினர்.
8 பேர் கைது
இதற்கிடையே இந்த தாக்குதலில் காயம் அடைந்த வேல்முருகன், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில், ஆனந்தபாபு உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோன்று தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்த மோகன் என்கிற ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேல்முருகன் (26) தங்கவேலு (25) செந்தில்குமார் (23) ரமேஷ் (26) ஆகிய 4 பேரும் போலீசார் கைது செய்தனர்.
பஸ் நிலைய பகுதியில் இரு தரப்பினர் மோதலால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story