பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது


பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது
x
தினத்தந்தி 13 Sept 2021 3:12 PM IST (Updated: 13 Sept 2021 3:12 PM IST)
t-max-icont-min-icon

பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல: வாழ்ந்து சாதிக்க வேண்டிய மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மேட்டூரை அடுத்த கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் ‘நீட்’ அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது இந்த முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘நீட்’ தேர்வு சமூக நீதிக்கு தீங்கானது. அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்த பிரச்சினைக்கு தற்கொலை தீர்வு அல்ல. மாணவச் செல்வங்களின் உயிர் விலைமதிப்பற்றது. வாழ்ந்து சாதிக்க வேண்டிய அவர்கள் தவறான முடிவை எடுக்கக்கூடாது.

மாணவர்கள் தங்களின் உயர்கல்வி குறித்த பார்வையை விசாலப்படுத்த வேண்டும். மருத்துவம் மட்டுமே உயர்கல்வி அல்ல. அதை விட சிறந்த, வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய படிப்புகள் பல உள்ளன. அவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தி த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்கொலை என்பது பிரச்சினைக்கு முடிவு ஆகாது. இதுபோன்ற செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் மிகுந்த மனஉறுதியுடன் இருக்க வேண்டும்’, என குறிப்பிட்டுள்ளார்.

Next Story