ஆழ்வார்திருநகரியில் தொழிலாளி தற்கொலை
ஆழ்வார்திருநகரியில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி காந்திநகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மகேஷ்(வயது 28). இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜோதி என்ற மனைவியும் 2½ வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் பலரிடம் கடன் வாங்கி திருப்பி கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்துள்ளது. அதனால் கனவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடும்ப தகராறு முற்றவே மகேஷ் மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story