கோவில்பட்டியில் சிறுவர், சிறுமியர் ஆக்கி போட்டி


கோவில்பட்டியில் சிறுவர், சிறுமியர் ஆக்கி போட்டி
x
தினத்தந்தி 13 Sep 2021 12:00 PM GMT (Updated: 13 Sep 2021 12:00 PM GMT)

கோவில்பட்டியில் சிறுவர், சிறுமியர் ஆக்கி போட்டி நடந்தது

கோவில்பட்டி:
கோவில்பட்டி ராஜீவ்காந்தி விளையாட்டுக்கழகம் சார்பில் பாரதியார் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு எஸ். எம். வெஜிடபிள்ஸ் கோப்பைக்கான 14 வயதுக்குட் பட்டோருக்கான மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி வ.உ. சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியில் 8 ஆண்கள் அணியும், 2 பெண்கள் அணியும் விளையாடின. இறுதிப்போட்டியில் தெற்கு திட்டங்குளம் பாரதி ஆக்கி அணியும், இலுப்பையூரணி ஆக்கி அணியும் மோதின. தெற்கு திட்டங்குளம் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக 3 மற்றும் 4-வது இடத்திற்கான போட்டியில் பாண்டவர்மங்கலம் ஆக்கி அணியும், கோவில்பட்டி ராஜிவ் காந்தி ஆக்கி அணியும் மோதின. பாண்டவர் மங்கலம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
பெண்களுக்கான போட்டியில் தெற்கு திட்டங்குளம் பாரதி பெண்கள் ஆக்கி அணியும், தாமஸ் நகர் ஆக்கி அணியும் மோதின. இதில் தெற்கு திட்டங்குளம் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் செ. குருசித்ர சண்முக பாரதி தலைமை தாங்கினார். வ.உ.சி.அரசு பள்ளி துணைத் தலைமையாசிரியர் அந்தோணி ராஜ், முன்னாள் நகர சபை கவுன்சிலர் முத்து ராஜ், காளிமுத்து பாண்டிராஜ், முருகன், உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய ஆக்கி நடுவர் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். வ.உ.சி.அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு எஸ். எம். வெஜிடபிள்ஸ் கோப்பையும் மற்றும் சான்றிதழும் வழங்கினார்.
போட்டி ஏற்பாடுகளை முகேஷ் குமார், ஜெகதீஸ்வரன், மகேஷ் குமார், நவநீதகிருஷ்ணன், கார்த்திக் ராஜா, அஜய் கோபி, மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். வேல் முருகன் நன்றி கூறினார்.

Next Story