தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தீராத வயிற்று வலியால் விபரீத முடிவு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சிவாடா காலனி ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாத்தான். இவரது மகள் ஷோபனா (வயது 22). இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஷோபனா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றும் இதுநாள் வரையிலும் அவருக்கு வயிற்றுவலி குணமாகவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் ஷோபனா தீராத வயிற்று வலியால் அவதியுற்றதாக தெரிகிறது.இதனால் தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அவரது தாயார் மலர் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தார். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ஷோபனா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story