அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2021 9:29 PM IST (Updated: 13 Sept 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம், 
 தாராபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். சத்துணவு ஓய்வுதாரர்களுக்கு குறைந்த பட்ச பென்சன் ரூ.7,850 வழங்கக்கோரியும், அகவிலைப்படி, மருத்துவ படியாக மாதம் ரூ. 300, மருத்துவ காப்பீடு குடும்ப ஓய்வூதியம் குடும்ப நல நிதி ரூ. 5 லட்சம், ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் மாதம் முதல் தேதியில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி, துணைத் தலைவர் ராமசாமி, செயலாளர் கருணாநிதி, வடுகநாதன், ஒன்றிய பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியதாரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story