பி.ஏ.பி தண்ணீர் வராததால் விவசாயிகள் போராட்டம்


பி.ஏ.பி தண்ணீர் வராததால்  விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Sept 2021 9:44 PM IST (Updated: 13 Sept 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி தண்ணீர் வராததால் விவசாயிகள் போராட்டம்

குடிமங்கலம், 
பி.ஏ.பி பாசனம் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.பி.ஏ.பி பாசனம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது.பி.ஏ.பி பாசனத்தில் நான்காம் மண்டலத்தில் இரண்டாம் சுற்றுக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் சின்னவீரம்பட்டி பகிர்மான கால்வாய் மடைஎண்38 இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தலா 25 ஏக்கர் வீதம் 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத வகையில் தனிநபர் அரணி வாய்க்காலை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவலறிந்த குடிமங்கலம் போலீசார், இளநிலை பொறியாளர் விஜயசேகர் மற்றும் அதிகாரிகள் வாய்க்கால் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படும் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குபின் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Next Story