திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.


திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
x
தினத்தந்தி 13 Sept 2021 9:58 PM IST (Updated: 13 Sept 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திருப்பூர், செப்.14-
திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அணைமேடு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராசு தலைமையில் திருப்பூர் ராயபுரம் அணைமேடு பகுதியை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக அருந்ததிய மக்கள் 200 குடும்பத்தினர் அணைமேடு பகுதியில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் ஒருவர் நாங்கள் வசிக்கும் பகுதிக்கான நிலத்தை கையகப்படுத்தியுள்ளார். எனவே தனியாருக்கு வழங்கப்பட்ட ஆவணங்களை ரத்து செய்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக சம்பந்தப்பட்ட இடத்தை கையகப்படுத்தி ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மதுக்கடைக்கு எதிர்ப்பு
இந்திய குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘முதலிபாளையம் சிட்கோவில் பல கோடி ரூபாய் செலவில் 100 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் 10 நிறுவனங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. சிட்கோ பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள கதவு, ஜன்னல்கள் என பல பொருட்களை திருடிச்சென்று விட்டனர். எனவே இந்த கட்டிடங்களை சீர்படுத்தி ஆதிதிராவிட மக்களுக்கும், தொழில் முனைவோருக்கும் கொடுத்து உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கொங்கணகிரி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்துபவர்கள் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு அதிக அளவில் இடையூறு செய்து வருகிறார்கள். மதுபோதையில் வாகனங்களை ரோட்டில் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கொங்கணகிரி முருகன் கோவில், பள்ளிகள் இந்த பகுதியில் அதிகம் உள்ளன. எனவே இந்த மதுக்கடைகயை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
வீடு ஒதுக்கீடு
தமிழ்நாடு அன்னை இந்திரா காங்கிரஸ் பொது தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘திருப்பூரின் பல பகுதிகளில் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர். 
நடவடிக்கை 
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- 
திருப்பூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின்படி கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிதி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் பலர் பள்ளிகளுக்கு பொருட்கள் வாங்குவதில் பல முறைகேடுகளை செய்துள்ளனர். 
இதுபோல் தரக்குறைவான பொருட்களையும் வாங்கியுள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.   

Next Story