சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 13 Sept 2021 10:54 PM IST (Updated: 13 Sept 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் ராயர். இவரது மகன் ராகுல்(வயது 21). கூலி தொழிலாளியான இவர் முன்னூரான் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனை சிறுமியின் பெற்றோர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ராகுல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனை வெளியில் சொல்லக்கூடாது என ராகுல் மற்றும் ராகுலின் தந்தை ராயர், தாயார் மாரியம்மாள் ஆகிய 3 பேரும் சிறுமியிடம் கூறியுள்ளனர். மேலும் சிறுமியும், ராகுலும் கணவன்-மனைவி போல் அவரவர் வீட்டிலேயே இருந்துள்ளனர். இதுகுறித்து ரகசிய தகவலின் பேரில் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்து உண்மை என உறுதிபடுத்தி அதனடிப்படையில் இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story