கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று காலையில் பாலக்கரையில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சிவகலை, செயற்குழு உறுப்பினர் கனகரத்தினம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பால்சாமி சங்கத்தின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆளவந்தார் சிறப்புரையாற்றினார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக ரூ.7,850 அகவிலைப்படியுடன் வழங்கி மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம் பாதுகாத்திட தமிழக அரசே வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சங்கத்தின் வேப்பூர் ஒன்றியத்தை சேர்ந்த ஜெகதீசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story