அரக்கோணத்தில் குழந்தையுடன், கர்ப்பிணி சாலையில் அமர்ந்து போராட்டம்
குழந்தையுடன், கர்ப்பிணி சாலையில் அமர்ந்து போராட்டம்
அரக்கோணம்
அரக்கோணம் நாகாலம்மன் நகர் அருகே அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு வயது குழந்தையுடன், 23 வயது மதிக்கத்தக்க கர்பிணி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் டவுன் போலீசார் அவரிடம் பேசி அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரிடம் இது குறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாரதி விசாரணை நடத்தினார். அப்போது அவர் தான் ஏமாற்றப்பட்டதாகவும், அதனால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story