11 ஆண்டு தலைமறைவாக இருந்தவர் திருச்சி விமான நிலையத்தில் கைது
கொலை வழக்கில் 11 ஆண்டு தலைமறைவாகி மலேசியாவில் இருந்தவர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம்:
கொலை வழக்கில் 11 ஆண்டு தலைமறைவாகி மலேசியாவில் இருந்தவர் நேற்று திருச்சி விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தலைமறைவாக இருந்தவர் கைது
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நன்னிலம் அருகே உள்ள வண்டாம்பாளையை சேர்ந்த பல்லு செந்தில் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருவாரூரை சேர்ந்த ஜெகதீசன் என்ற சிவசுப்பிரமணியன் (வயது 38). என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவர் 2008-ம் ஆண்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி, 11 ஆண்டுகளாக மலேசியாவில் தனது காதலியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் கைது
இந்தநிலையில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தீவிர முயற்சியின் காரணமாக நன்னிலம் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில், தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஜெகதீசன் என்கிற சிவசுப்பிரமணியன் மலேசியாவில் இருந்து வருவது போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் திருச்சி விமான நிலைய போலீசார் உதவியுடன் தனிப்படையினர் விமான நிலையத்திற்கு சென்று, மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த ஜெகதீசன் என்கிற சிவசுப்பிரமணியனை கைது செய்து, திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நன்னிலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story