பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு


பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 7:25 PM GMT (Updated: 13 Sep 2021 7:25 PM GMT)

கூடலூரில் தொடர் மழையால் தொழிலாளர்கள் வருகை குறைந்துள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர்

கூடலூரில் தொடர் மழையால் தொழிலாளர்கள் வருகை குறைந்துள்ளது. இதனால் பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை

கேரளாவில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியதும் கூடலூர் பகுதியிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்படும். நடப்பாண்டில் பருவமழை சரிவர பெய்யவில்லை.  இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர் பலத்த மழை பெய்து வருகிறது.
நாடுகாணி உள்ளிட்ட சில இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடும் குளிர் மற்றும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பலத்த மழையால் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களும் பணிக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஆனால் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது.

தேயிலை பறிக்கும் பணி பாதிப்பு

இதன் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. சில தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிக்கு வந்திருந்தாலும் தொடர் மழையால் பச்சைத் தேயிலையை இயல்பாக பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதேபோல் சிறு விவசாயிகள் தோட்டங்களிலும் பச்சை தேயிலை பறிக்காமல் விடப்பட்டதால் அவைகள் முதிர்ச்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறு விவசாயிகள் கூறியதாவது:- 
கூடலூர் பகுதியில் பருவமழை மிக தாமதமாக பெய்து வருகிறது. சரியான நேரத்தில் மழை பெய்தால் மட்டுமே இஞ்சி, குறுமிளகு உள்ளிட்ட பயிர்கள் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் மழை தாமதமாக பெய்ததால் குறுமிளகு விளைச்சல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல் மோசமான காலநிலையால் பச்சை தேயிலை பறிக்கும் பணிக்கு தொழிலாளர்கள் சரிவர வருவதில்லை. இதனால் பச்சை தேயிலை வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story