விவசாயிக்கு அரிவாள் வெட்டு
மணிமுத்தாறு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
அம்பை:
மணிமுத்தாறு அருகே உள்ள கீழ ஏர்மாள்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கந்தன். இவர் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பாயி முருகன் (வயது 39) என்பவர் குடிபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த கந்தன் மகன் விவசாயியான முருகன் (39) என்பவர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கருப்பாயி முருகன் அரிவாளால் முருகனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கருப்பாயி முருகனை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story