மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை + "||" + suicide

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள மாரனேரி கிளியம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் பரத் (வயது 19). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதை பாண்டியும், அவரது மனைவியும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் மது அருந்திய பரத் வீட்டிற்கு சென்றால் பெற்றோர் சத்தம்போடுவார்கள் என்று நினைத்து அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.