மாவட்ட செய்திகள்

1½ வயது குழந்தையை கொன்று கிணற்றில் குதித்து தாய் தற்கொலை + "||" + Mother commits suicide by killing 10-year-old child

1½ வயது குழந்தையை கொன்று கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

1½ வயது குழந்தையை கொன்று கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
பாகல்கோட்டை அருகே 1½ வயது குழந்தை கொன்று கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்துகொண்டார்.
பாகல்கோட்டை:

குழந்தையுடன் மாயம்

  பாகல்கோட்டை மாவட்டம் குலேதகுட்டா தாலுகா ராகாபுரா கிராமத்தை சேர்ந்தவர் பகீரவ்வா (வயது 28). இவருக்கு திருமணமாகி 1½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஹம்சநூறு கிராமத்தில் உள்ள தன்னுடைய பாட்டியின் வீட்டுக்கு பகீரவ்வா தனது குழந்தையுடன் வந்திருந்தார். நேற்று தனது கணவர் வீட்டுக்கு அவர் செல்வதாக இருந்தது.

  இந்த நிலையில், பாட்டி வீட்டில் இருந்த பகீரவ்வா திடீரென்று குழந்தையுடன் காணாமல் போய் விட்டார். அவரை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

கொலை-தற்கொலை

  இந்த நிலையில், பாட்டி வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் பகீரவ்வா மற்றும் குழந்தை பிணமாக கிடந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் குலேதகுட்டா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து தாய், குழந்தையின் உடல்களை மீட்டனர். 2 பேரின் உடல்களை பார்த்தும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

  இதையடுத்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக பகீரவ்வா, குழந்ைதயை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து குலேதகுட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.