சிற்றார்-2, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 26 மி.மீ. மழைபதிவு


சிற்றார்-2, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 26 மி.மீ. மழைபதிவு
x
தினத்தந்தி 13 Sep 2021 8:55 PM GMT (Updated: 13 Sep 2021 8:55 PM GMT)

குமரி மாவட்டத்தில் சிற்றார்-2, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 26 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் சிற்றார்-2, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 26 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
குமரியில் மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்து நள்ளிரவு வரை மழை விட்டு, விட்டு பெய்தது. நேற்றும் லேசான சாரல் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக சிற்றார்-2, முள்ளங்கினாவிளை பகுதிகளில் 26 மில்லி மீட்டர் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 4, பெருஞ்சாணி அணை- 18.2, சிற்றார் 1- 7, புத்தன்அணை- 17.4, மாம்பழத்துறையாறு -12, முக்கடல் அணை- 6, பூதப்பாண்டி- 4.8, களியல்- 13.4, கன்னிமார்-3.8, குழித்துறை- 12, கொட்டாரம்- 11.2, மயிலாடி- 6.2, நாகர்கோவில்- 11.2, சுருளக்கோடு- 9.2, தக்கலை- 14.5, குளச்சல்- 8.4, இரணியல்- 12.4, கோழிப்போர்விளை- 15, அடையாமடை- 4, குருந்தங்கோடு- 16, ஆனைக்கிடங்கு- 12.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. 
மறுகால் பாய்ந்தது
இந்த மழையின் காரணமாக ஆறுகள், வாய்க்கால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் குமரி அணையில் மழை வெள்ளம் மறுகால் பாய்ந்தோடியது. 
நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.52 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 428 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 62.02 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 207 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 16.17 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 178 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 16.27 அடியாக இருந்தது. 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 24.90 அடியாகவும், 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 35.02 அடியாகவும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 21.70 அடியாகவும் உள்ளன. மாம்பழத்துறையாறு அணையில் இருந்து வினாடிக்கு 30 கன அடி தண்ணீரும், முக்கடல் அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 7.42 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. 

Next Story