கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி
விருதுநகர் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியானான்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர்.நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பிரேம்குமார் (வயது 12). மேலச் சின்னையாபுரம் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த, இவன் தனது நண்பன் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (13) என்பவனுடன் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றான். கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது பிரேம்குமார் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுபற்றிய தகவலின் பேரில் விருதுநகர் தீயணைப்பு படையினர் விரைந்துசென்று சிறுவனின் உடலை மீட்டனர். இதுபற்றி வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story