பழனி அருங்காட்சியகத்தில் புகைப்பட கண்காட்சி
திண்டுக்கல் மாவட்ட வரலாறு குறித்து புகைப்பட கண்காட்சி பழனி அருங்காட்சியகத்தில் 10 நாட்கள் நடைபெறுகிறது.
பழனி:
பழனி அரசு அருங்காட்சியகத்தில் ‘திண்டுக்கல் மாவட்ட வரலாறு' குறித்த புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்ட வரலாறு, திண்டுக்கல் மலைக்கோட்டை, பழனி முருகன் கோவில், மாவட்டத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள், நடுகற்கள், பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள் என ஏராளமான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த கண்காட்சியை கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் பார்த்து ரசித்தனர். இந்த கண்காட்சி குறித்து அருங்காட்சியக அலுவலர் குணசேகரன் கூறும்போது, நாளை (புதன்கிழமை) திண்டுக்கல் மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் கண்காட்சியை அனைவரும் கண்டு பயன்பெற வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story