மாவட்ட செய்திகள்

மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் பலி + "||" + death

மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் பலி

மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் பலி
ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் வேன் ேமாதி பரிதாபமாக பலியானார்.
ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர் வேன் ேமாதி பரிதாபமாக பலியானார். 
குலதெய்வ கோவில் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 30). இவர் டெல்லியில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வந்தார்.  இவரது மனைவி மணிமேகலை சென்னையில் அரசு செவிலியராக உள்ளார். விடுமுறைக்காக நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு பால்பாண்டி வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை இவர், மணிமேகலையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பேயம்பட்டியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். 
காவலர் பலி 
 பாரதி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது ராஜபாளையத்தில் இருந்து சத்திரப்பட்டி நோக்கி சென்ற மினி வேன், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பால்பாண்டி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு  ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த தெற்கு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மினி வேன் டிரைவர் நரிமேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (32) என்பவரை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் சாவு
பண்ருட்டி அருகே தந்தையின் இறுதிச்சடங்கில் ஆட்டோ டிரைவர் இறந்தார்.
2. மயங்கி கிடந்த டெய்லர் சாவு
விருதுநகரில் மயங்கி கிடந்த டெய்லர் பரிதாபமாக இறந்தார்.
3. கிரேன் மோதி முதியவர் பலி
சிவகாசியில் கிரேன் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4. கிணற்றில் முதியவர் பிணம்
சிவகாசி அருகே கிணற்றில் முதியவர் பிணம் கண்டெடுக்கப்பட்டது.
5. லாரி டிரைவர் திடீர் சாவு
லாாி டிரைவர் திடீரென இறந்தார்.