கறிக்கடை உரிமையாளர் கொலை: கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கறிக்கடை உரிமையாளர் கொலை: கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 14 Sept 2021 2:56 AM IST (Updated: 14 Sept 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

கறிக்கடை உரிமையாளர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஓமலூர்:
கறிக்கடை உரிமையாளர் கொலையில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கறிக்கடை உரிமையாளர் கொலை
ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டி அருகே லோக்கூர் வனப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு கறிக்கடை உரிமையாளர் பாதுஷா மொய்தீன் (வயது 30) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்த சக்தி என்ற சக்திபிரபு (31), சேலம் சிவதாபுரம் பனங்காடு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (26), சிவதாபுரம் ஆண்டிபட்டி பனங்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (21), சேலம் ஆண்டிப்பட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ் (22) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் என்பவர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். பண்ணப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதில் சேலம் சிவதாபுரம் பனங்காடு பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த மணி என்ற மணிகண்டன் (25), சேலம் கிச்சிப்பாளையம் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்த சக்தி என்கிற சக்தி பிரபு (31) ஆகிய 2 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
எனவே இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இவர்களது பரிந்துரையை ஏற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன், சக்திபிரபு இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

Next Story