மாவட்ட செய்திகள்

விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி + "||" + Sub-inspector killed by poisonous bite

விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி

விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.
திருவொற்றியூர்,

சென்னை ஓட்டேரி பி.பி.சாலை போலீஸ் குடியிருப்பு பி பிளாக்கை சேர்ந்தவர் ரவி செல்வம் (வயது 58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.


கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு விஷவண்டு கடித்தது. இதனால் அவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டு வந்தது. இதற்காக அப்போதில் இருந்தே அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் 12-ந் தேதி அவருக்கு மீண்டும் காலில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சப்-இன்ஸ்பெக்டர் ரவி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

2 வருடங்களுக்கு முன்பு கடித்த வண்டின் விஷம், உடல் முழுவதும் பரவி அவரது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.
2. விநாயகர் சிலையை கரைத்துவிட்டு குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துவிட்டு குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
3. காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.
5. ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி பலி 24 பேருக்கு உடல் நிலை பாதிப்பு
ஆரணியில் ஓட்டலில் சாப்பிட்ட 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தாள். 24 பேருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.