காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு


காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி ஓடியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Sep 2021 11:02 AM GMT (Updated: 14 Sep 2021 11:02 AM GMT)

காஞ்சீபுரம் கோர்ட்டு சுவரை தாண்டி ரவுடி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 23). ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தன்னை குற்ற விசாரணை முறிவு சட்டம் 110 பிரிவின் கீழ் நன்னடத்தை பிணையில் விடுவிக்க போலீசாரிடம் விண்ணப்பித்துள்ளார்.அவரை நன்னடத்தை பிணையில் விடுவிக்க 2 ஜாமீன்தாரர்கள் தேவை என போலீசார் தெரிவித்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தின் பின்புறம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல கோர்ட்டு வளாக சுற்றுச்சுவரை ஏறி குதித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்காணிப்பு கேமராவில் பார்த்த போலீசார், கோர்ட்டு வளாகத்தில் இருந்த கைதி தப்பி ஓடியதாக தவறாக புரிந்துகொண்டு அவரை தேடி வந்தனர்.

நன்னடத்தை ஜாமீன்

இந்தநிலையில் நன்னடத்தை ஜாமீனுக்கு 2 ஜாமீன்தாரர்களை தயார் செய்துகொண்டு ரவுடி பத்மநாபன் மீண்டும் சிவகாஞ்சி போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.

இதையடுத்து கோர்ட்டு வளாகத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்பட்ட பத்மநாபனை, நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க சிவகாஞ்சீ போலீசார், காஞ்சீபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் அழைத்துச் சென்றனர். பத்மநாபனை ஓராண்டு நன்னடத்தை ஜாமீனில் விடுவிக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

Next Story