ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேவதானப்பட்டி:
ஜெயமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சுகந்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும். கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் தேனி மாவட்ட செயலாளர் வெண்மணி, பெரியகுளம் தாலுகா செயலாளர் சுஜாதா உள்பட பலர் கலந்து கொண்டனர் பின்னர் அவர்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு வந்திருந்த பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சேது குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story