மாவட்ட செய்திகள்

போடி அருகேகண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்தவர் கைது + "||" + Near Bodi Fisherman arrested without permission

போடி அருகேகண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்தவர் கைது

போடி அருகேகண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்தவர் கைது
போடி அருகே கண்மாயில் அனுமதியின்றி மீன் பிடித்தவர் கைது செய்யப்பட்டார்.
போடி:
போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர் நேற்று அதிகாலை வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மீனாட்சியம்மன் கண்மாயில் வலை போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வைகை அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் முருகேசன் அனுமதி இன்றி மீன்பிடித்து கொண்டிருந்த செல்வத்தை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் அவரிடம் இருந்த 10 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டது. 
இதுகுறித்து போடி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்தனர்.