ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2021 8:02 PM IST (Updated: 14 Sept 2021 8:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பூமயில் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடைகளில் மத்திய அரசு சார்பில் வழங்கும் பொருட்கள் அனைத்தையும், அனைவருக்கும் வழங்க வேண்டும். கைரேகை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். ஏழை எளிய குடும்பங்களை பாதிக்கும் என்.பி.எச்.எச் என்ற அட்டை குறியீட்டை பி.எச்.எச் அட்டையாக மாற்ற வேண்டும். ரேஷன் கடைகளில் மாதம் முழுவதும் பொருட்கள் கிடைப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
கலந்து கொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் எம்.கமலா, மாநகர தலைவர் எம்.காளியம்மாள், புறநகர் குழு செயலாளர் பி.சரசுவதி, புறநகர் குழு தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர். விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
ரேஷன் கடைகளில் கைரேகை முறையை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் உள்ள என்பிஹெச்ஹெச் குறியீட்டை பிஹெச்ஹெச் என மாற்ற வேண்டும். விதவை, முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொருளாளர் ஆர்.மல்லிகா பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் டி.சித்ரா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பவுன்கிரேஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கன்னியம்மாள், நகரக்குழு உறுப்பினர்கள் பி.மாரியம்மாள், ராமலட்சுமி, எஸ்.மாரியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story