லாட்டரி எண்கள் விற்றவர் கைது


லாட்டரி எண்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 14 Sept 2021 8:13 PM IST (Updated: 14 Sept 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் லாட்டரி எண்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி பாரதிநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் பிரையண்ட்நகர் 12-வது தெருவில் வைத்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று கண்ணனை மடக்கி பிடித்து கைது செய்தார். அவரிடம் இருந்து லாட்டரி எண்கள் அடங்கிய சீட்டு, ரூ.200 பறிமுதல் செய்தார்.


Next Story