கூடலூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது
கூடலூர் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கூடலூர்:
கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் 18-ம் கால்வாய் அருகே ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் தலைச்சுமையாக கட்டைப்பையுடன் நடந்துவந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 56 மதுபாட்டில்கள் இருந்தது. போலீசார் விசாரனையில், அவர் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 28) என்பதும், டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story