அய்யா வைகுண்டர் பூஞ்சப்பரத்தில் பவனி
உடன்குடி அருகே அய்யா வைகுண்டர் பூஞ்சப்பரத்தில் பவனி வந்தார்.
உடன்குடி:
உடன்குடி கொட்டங்காடு முத்துகிருஷ்ணாபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் ஆவணி திருவிழாவை ஒட்டி, கடந்த செப்.10-ந் தேதி காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, கோபுரத்திற்கு மாலையிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் அகண்ட உகப்படிப்பு, உம்பான் தர்மம் வழங்கல், அன்னதர்மம் வழங்கல், சந்தனக்குடம் எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. தினமும் அய்யா கருடர், குதிரை, நாகம், தொட்டில் போன்ற பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு அய்யா பூஞ்சப்பரத்தில் பவனியும், பள்ளி உணர்தல், உகப்படிப்பு தவனபால் தர்மம், வரி இனிமம் வழங்கலுடன் ஆவணி திருவிழா நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story