பழனியில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பழனி:
அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய ஜமாத்தார்கள் சார்பில் பழனி குளத்து ரவுண்டானா பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் சாந்து முகமது தலைமை தாங்கினார்.
இதில், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் டெல்லியில் பெண் போலீஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட வாசிம்அக்ரம் குடும்பத்துக்கு நீதி வழங்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Related Tags :
Next Story