பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம், பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம் சார்பில், கோவில்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத் தலைவர் மகேந்திரமணி, அகில இந்திய பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம், ஒப்பந்த ஊழியர் சங்கத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்யக் கூடாது. ஒவ்வொரு மாதமும் மாதத்தின் கடைசி நாளான்று சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் சங்கச் செயலாளர் கோலப்பன், பி.எஸ்.என்.எல். மற்றும் தொலைத் தொடர்பு ஓய்வூதியர் சங்க மாவட்ட உதவிச் செயலாளர் சுப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story