அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் பாரம்பரிய உணவு கண்காட்சி


அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் பாரம்பரிய உணவு கண்காட்சி
x
தினத்தந்தி 14 Sep 2021 4:41 PM GMT (Updated: 14 Sep 2021 5:01 PM GMT)

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் பாரம்பரிய உணவு கண்காட்சி நடந்தது.

குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது. 

கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் சுதா செல்வகுமார் தொடங்கி வைத்தார். இதில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் 25 வகையான பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெற்றன. இதில் பாசி பருப்பு புட்டு, வாழை இலை அடை ஆகியவை செய்திருந்த 11-ம் வகுப்பு மாணவி ரலீசா முதல் பரிசையும், உளுத்தம் பருப்பு சாதம், எள்ளு துவையல் செய்திருந்த 10-ம் வகுப்பு மாணவி இந்துஜா 2-ம் பரிசையும், கருப்பு கவுன் அரிசி லட்டும், சூப்பும் செய்திருந்த 12-ம் வகுப்பு மாணவி சிவசங்கரி 3-ம் பரிசையும் பெற்றனர்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கார்த்திக், கார்த்திகேயன், ஹரால்ட்ஜெரோம், ஆசிரியை செல்விசிரி ஆகியோர் செய்து இருந்தனர்.

Next Story