2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு


2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 14 Sept 2021 10:39 PM IST (Updated: 14 Sept 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே மணலை பதுக்கிவைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மூலனூர், செப்.15-
மூலனூர் அருகே மணலை பதுக்கிவைத்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணல் பதுக்கல்
 மூலனூரை அடுத்த தட்டாரவலசு பகுதியில் உள்ள பீமர தோட்டத்தை சேர்ந்தவர் கவுதமன்வயது 41, அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் 40.இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.இந்த நிலையில் அவர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடி பதுக்கி வைத்து இருப்பதாக தாராபுரம் சப்- கலெக்டர் அனந்த்மோகனுக்கு தகவல் கிடைத்தது.
  அதை தொடர்ந்து அவர்களுக்கு சொந்தமான தோட்டங்களில் ஆய்வு நடத்தும்படி அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். 
அதை தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் சொந்தமான தோட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு 36 யூனிட் ஆற்றுமணலை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. 
2 பேர் மீது வழக்குப்பதிவு 
இதுகுறித்து மூலனூர் போலீசார் கவுதமன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் இதுசம்பந்தமாக தாராபுரம் தாசில்தார் சைலஜா, மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story