தொலைக்காட்சி பெட்டி சரிபார்ப்பு பணி தீவிரம்


தொலைக்காட்சி பெட்டி சரிபார்ப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Sep 2021 5:55 PM GMT (Updated: 14 Sep 2021 5:55 PM GMT)

இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி சரிபார்ப்பு பணி தீவிரம்

திருப்பூர்
கடந்த 2006 2011 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது மக்களுக்கு இலவச வண்ண  தொலைக்காட்சி பெட்டி. அரசு சார்பில் வழங்கப்பட்டது. மேலும் விடுபட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தயார் நிலையில் இருந்த இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகள்,  ஆட்சி மாற்றம் வந்ததும் பள்ளிகள், சமுதாய கூடங்களில் இருப்பு வைக்கப்பட்டது. திருப்பூர் மாநகரிலும் இதுபோல் பள்ளிகள், சமுதாய கூடங்களில் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளாக அறையில் இருப்பில் இருந்த இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டி தற்போது மீண்டும் எடுத்து அதில் பயன்படுத்தக்கூடிய வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை தனியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்தனம்பாளையத்தில் உள்ள இந்திராகாந்தி சமுதாய நலக்கூடம் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் இயங்கும் தன்மையில் உள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை தனியாக பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 2 நாட்கள் இந்த பணிகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு இந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

Next Story