4 மாத சம்பள நிலுவையை வழங்ககோரி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்
4 மாத சம்பள நிலுவையை வழங்ககோரி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும், தற்காலிக கவுரவ பேராசிரியர்கள்- விரிவுரையாளர்கள், தற்காலிக அலுவலக பணியாளர்கள் தங்களுக்கு 4 மாதமாக வழங்கப்படாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஊதியம் வழங்க கோரி பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் எவ்வித பலனும் கிடைக்காததால், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் நேற்று கல்லூரி வாயில் முன்பு மதிய உணவு இடைவேளையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சந்திரமவுலி தலைமை தாங்கினார். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல இன்றும் (புதன்கிழமை), நாளையும் மதிய உணவு இடைவேளையின் போது தற்காலிக பேராசிரியர்கள், தற்காலிக அலுவலக பணியாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story