வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 5½ பவுன் நகை பணம் திருடி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த மேலப்புலியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). நேற்று காலை சதீஷ்குமார் தனது வயலில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயம் பட்டரைபோட தனது மனைவி விஜி, தாய் வளர்மதி மற்றும் மகன் ராகவன் ஆகிய 4 பேரும் வயலுக்கு சென்றனர். பின்னர் இரவு 7.30 மணிக்கு வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் முன் கதவின் பூட்டை உடைத்து படுக்கை அறையில் இருந்த பீரோவை நெம்பி அதில் துணிக்கு அடியில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம், 4½ பவுன் செயின், 2 ஜோடி தோடு உள்பட 5½ பவுன் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story