கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 14 Sep 2021 6:16 PM GMT (Updated: 14 Sep 2021 6:16 PM GMT)

கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி பல்கீஸ் அறிவுரையின் பேரில் கல்லூரி மாணவர்களுக்கு குடும்ப நல சட்டங்கள் குறித்தான சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி லதா தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை, பாதுகாப்பு அலுவலர் முத்துச்செல்வி, பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய ஒருங்கிணைப்பாளர் கீதா, பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களில் இருந்து மீட்க 181 என்ற அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இளநிலை நிர்வாக உதவியாளர் சக்கரபாணி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள், சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தினர். முன்னதாக கல்லூரி முதல்வர் செல்வன் வரவேற்றார். முடிவில் உதவி பேராசியர் மாயவேல் நன்றி கூறினார்.

Next Story