வரைவு வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு பட்டியல்
திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு பட்டியலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு பட்டியலை கலெக்டர் முருகேஷ் வெளியிட்டார்.
வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் வரைவு வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டமும் இன்று நடைபெற்றது.
கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி வாக்குச்சாவடிகளின் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2022-ம் தேதியை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்குமாறு தெரிவித்து உள்ளது.
அதன் முன்பாக 1500-க்கு மேல் வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்த வேண்டுமென்றும் அறிவுறுத்தி உள்ளது.
அவ்வாறு 1500-க்கு மேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடி இடம் மாறுதல் தேவைப்படும் வாக்குச் சாவடிகள் பட்டியல் தயாரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு செய்து அதன் இறுதி பட்டியலை நேர்த்தில் ஆணையம் ஒப்புதலுக்கு அனுப்புமாறு தெரிவித்து உள்ளது.
20-ந் தேதிக்குள்
எனவே அனைத்து சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த பட்டியலை சரிபார்த்து ஏதேனும் வாக்குச்சாவடி குறித்த தங்களது கருத்துகள், ஆட்சேபனைகள் இருப்பின் அதன் விவரத்தினை வருகிற 20-ந் தேதிக்குள் (திங்கட்கிழமை) சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
அதன் பின்பு இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, உதவி கலெக்டர்கள் வெற்றிவேல், கவிதா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
நேற்று வெளியிட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சட்டமன்ற தொகுதி வாரியாக வருமாறு:-
1.செங்கம் (தனி) - 323, 2.திருவண்ணாமலை - 296, 3.கீழ்பென்னாத்தூர் - 285, 4.கலசபாக்கம் - 281, 5.போளூர்- 285, 6.ஆரணி - 311, 7.செய்யாறு - 311, 8.வந்தவாசி (தனி) - 280.
வாக்காளர்கள்
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 656 ஆண்கள், 10 லட்சத்து 60 ஆயிரத்து 856 பெண்கள், 91 மூன்றாம் பாலினத்தவர்கள் என 20 லட்சத்து 78 ஆயிரத்து 603 வாக்காளர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story