மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது + "||" + Master arrested for sexually harassing girl

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது
காட்பாடி

காட்பாடி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி. 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8-ந் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். அந்த நேரத்தில் அருகில் வசிக்கும் கட்டிட மேஸ்திரி பாலாஜி (வயது 30) என்பவர் சிறுமியின் வீட்டுக்கு வந்தார். சிறுமியிடம் தண்ணீர் கேட்டுள்ளார். சிறுமி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தவுடன் குடித்துவிட்டு சிறுமியை ஆசைவார்த்தை கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து காட்பாடியில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.