மாவட்ட செய்திகள்

லாரி மோதி வாலிபர் பலி + "||" + Valipar kills

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி
க.பரமத்தி அருகே லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
க.பரமத்தி
நேருக்கு நேர் மோதல்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மண்டகமேட்டை சேர்ந்த அய்யப்பன் (வயது 30). இவர் க.பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் கல்குவாரியில் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார். 
நேற்று இரவு கல்குவாரியில் இருந்து க.பரமத்தியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-கோவை சாலையில் ரங்கநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியும், அய்யப்பன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. 
வாலிபர் பலி
இதில் லாரிக்கு அடியில் சிக்கி அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து க.பரமத்தி போலீசார் அய்யப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதையடுத்து டிப்பர் லாரியை ஓட்டி வந்த குளித்தலை, இனுங்கூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜ்குமார் (வயது 28) என்பவரை கைது செய்து க.பரமத்தி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் மோதி வாலிபர் சாவு
கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2. வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
3. விபத்தில் வாலிபர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
4. வாலிபர் பலி
வாலிபர் பலி
5. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
ஆண்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் ஒருவர் பலியாகினார்.