மாவட்ட செய்திகள்

மயானத்துக்கு செல்ல மாற்றுப்பாதை அமைப்பு + "||" + Diversion system to go to the cemetery

மயானத்துக்கு செல்ல மாற்றுப்பாதை அமைப்பு

மயானத்துக்கு செல்ல மாற்றுப்பாதை அமைப்பு
மயானத்துக்கு செல்ல மாற்றுப்பாதை அமைப்பு
சோளிங்கர்

சோளிங்கரில் திருத்தணி சாலையில் உள்ள மயனத்திற்கு இறந்தவர் உடலை நந்தி ஆற்றை கடந்து எடுத்து செல்ல வேண்டும். தற்போது ஏரி நிரம்பி நந்தி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் இறந்தவர் உடலை எடுத்துசெல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். 

மாற்றுப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் வடிவேல் தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர் நடராஜன் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மாற்றுப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.