அரக்கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸகரபாண்டியன் ஆய்வு செய்தார்.


அரக்கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸகரபாண்டியன் ஆய்வு செய்தார்.
x
தினத்தந்தி 14 Sep 2021 6:52 PM GMT (Updated: 14 Sep 2021 6:52 PM GMT)

அரக்கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸகரபாண்டியன் ஆய்வு செய்தார்.

அரக்கோணம்

அரக்கோணம் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸகரபாண்டியன் ஆய்வு செய்தார். அதனை ெதாடர்ந்து அவர் கூறுகையில் மாவட்டத்தில் 356 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதாக கூறினார்.
உள்ளாட்சி தேர்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது. அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. 

தரைதளத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கு பதிவாகும் வாக்குகளும், முதல் தளத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கும், மூன்றாம் தளத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு பதிவாகும் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இரண்டாம் தளத்தில் வாக்குகள் பிரிக்கும் மையம் அமைக்கப்படவுள்ளது.

வாக்குச்சீட்டுகளை பதவிகளுக்கு ஏற்றவாறு பிரிக்கும் அறையில் 8 ஆயிரம் வாக்குகள் வீதம் ஒரு மேஜை அமைத்து மொத்தம் 60 மேஜைகள் வாக்கு பிரிக்கும் அறையில் அமைக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 40 மேஜைகளும், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அறைகளில் தலா 24 மேஜைகள் அமைக்கப்பட உள்ளன.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்காக செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வாக்குப் பெட்டிகள் வைக்க ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் வந்து செல்ல தனித்தனியே பாதைகள், தடுப்புகள் கொண்டு அமைக்க வேண்டும் மற்றும் உணவுகள் கொண்டு வருவதற்கும் அவசர தேவைக்கும் தனியான பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆலோசனை வழங்கினார்.

பேட்டி

ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் தெரிவித்ததாவது:-
ராணிபேட்டை மாவட்டத்தில் 7 வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு செய்து வருகிறோம். அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் அரக்கோணம் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். ராணிபேட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் 13 பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர்கள், 127 யூனியன் வார்டு கவுன்சிலர்கள் 288 ஊராட்சி தலைவர்கள், 2 ஆயிரத்து 220 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

அதன் அடிப்படையிலேயே இந்த வாக்கு எண்ணிக்கை மையத்தில் போதுமான வசதிகள் குறித்து ஆய்வு செய்துள்ளோம். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 356 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளது மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடை செய்ய 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது, 

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு

இந்த ஆய்வுகளின் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருச்சி லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் திருக்குமார் அரக்கோணம் உதவி கலெக்டர் சிவதாஸ், போலீஸ் துணை சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், தாசில்தார் பழனிராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருக்குமார், பாலாஜி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story