அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Sept 2021 12:58 AM IST (Updated: 15 Sept 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, செப். 15-
திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்காரர் மற்றும் பன்முக திறன் ஊழியர்கள் சார்பில் பணி நெருக்கடிகளை கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி கோட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் வணிக இலக்கு என்ற பெயரில் பணிகளை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுப்பதை கண்டித்து கோஷம் எழுப்பபட்டது. இதில் அஞ்சல்-3 கோட்ட செயலாளர் கிரிபாலன், முன்னாள் கோட்ட செயலாளர் மருதநாயகம் மற்றும் திருச்சி, அரியமங்கலம், லால்குடி, ஜெயம்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண் தபால் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story