புதர் மண்டி கிடக்கும் கண்மாய்


புதர் மண்டி கிடக்கும் கண்மாய்
x
தினத்தந்தி 14 Sep 2021 7:28 PM GMT (Updated: 14 Sep 2021 7:28 PM GMT)

வத்திராயிருப்பு அருகே புதர் மண்டி கிடக்கும் கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு அருகே புதர் மண்டி கிடக்கும் கண்மாய் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 
கண்மாய் 
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 40 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்யும் மழைநீர் வருகிறது. இந்த கண்மாய் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். 
இந்தநிலையில் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட  வில்வராயன்குளம் கண்மாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கண்மாய் முழுவதும் தேவையற்ற செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. 
கோரிக்கை 
இதனால் இந்த கண்மாயை நம்பி உள்ள விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கண்மாயில் வளர்ந்துள்ள தேவையற்ற செடிகளை அகற்றி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அத்துடன் இந்த கண்மாயில் குடிமராமத்து பணிகள் செய்யும் போது முழுமையாக செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story