மனு கொடுக்கும் போராட்டம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிவகாசி யூனியன் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலையை 200 நாளாக அறிவித்து சம்பளம் ரூ.600 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு ஒன்றிய நிர்வாகி சரோஜா தலைமை தாங்கினார்.
இதில் மாநில செயலாளர் லட்சுமி, ஒன்றிய தலைவர் தவம், செயலாளர் தமிழ்செல்வி, பாலம்மாள், வசந்தி, லட்சுமியம்மாள், தனராணி, வாசுகி, கவுரி, மீனா, ஜெயசுதா உள்பட 45 பெண்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜிடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் மனுவை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story