பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2021 7:53 PM GMT (Updated: 14 Sep 2021 7:53 PM GMT)

விருதுநகரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், 
விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு மாத இறுதியில் ஊதியம் வழங்க வேண்டும், 3-வது ஊதியக்குழுவினை அமல்படுத்த கோரியும், ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை மற்றும் 12 மாத ஊதியம் வழங்க வேண்டும், நேரடி நியமன ஊழியர்களுக்கு 30சதவீத ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை எக்காரணம் கொண்டும் வேலை நீக்கம் செய்யக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் அய்யாச்சாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை அமைப்பாளர் குருசாமி தொடங்கி வைத்தார். பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இணை ஒருங்கிணைப்பாளர் முத்துச்சாமி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Next Story